இந்த மருந்து உங்களிடம் உள்ளதா? உடனே தூக்கிப்போடுங்க…

காய்ச்சல் மருந்து உட்பட 156 மருந்துகளுக்கு தடை! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்மல் கலப்பு மருத்துகள் உட்பட 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

FDC மருந்துகள் என்பவை ஒரு நிலையான விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவையைக் கொண்டவையாகும். இந்த வகையான மருந்துகளை காக்டெய்ல் மருந்துகள் என்றும் அழைப்பர்.

இந்நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, குறிப்பிட்ட சில வகை மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. azithromycin உடன் adapalene என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் முகப்பரு தழும்புகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.

விளம்பரம்

Also Read:
புதிய அப்டேட்டை வழங்கிய வாட்ஸ்அப்… நீங்கள் இனி டைப் செய்ய வேண்டாம்… உங்கள் குரலே போதும் !

இந்த கலவையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. இதேபோல், Aceclofenac 50mg மற்றும் Paracetamol 125mg கலவையாக கொண்ட மாத்திரையையும் இனி விற்பனை செய்ய முடியாது.

மத்திய அரசின் இந்த முடிவால் சிப்லா, லுபின், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் சில மாத்திரைகளின் உற்பத்தி குறைக்கப்பட இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டும் மத்திய அரசு 360 FDC எனப்படும் நிலையான கலவை மருந்துகளுக்கு தடை விதித்திருந்தது.

விளம்பரம்

இதனால் அப்போதே 2700 நிறுவனங்களின் மருந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Banned
,
central government
,
Paracetamol Tablet

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்