இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் நாளை(செப். 13) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியுள்ளார். இப்படம் செப். 13 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

சில விஷயங்கள் மாறுவதில்லை… மகன்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற செப். 13 ஆம் தேதி வெளியாகிறது.

ஜித்து ஜோசஃப் – ஃபாசில் ஜோசஃப் கூட்டணியில் உருவான நுனக்குழி திரைப்படம் செப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழி படங்களான ஏய் மற்றும் மிஸ்டர் பச்சன் ஏய் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. மலையாள படங்களான விஷேஷம் அமேசான் பிரைமிலும், தலைவன் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து