இனி ரயிலில் இந்த தொல்லை இல்லை.. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

இனி ரயிலில் இந்த தொல்லை இல்லை.. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

ரயில் பயணம்

பெரும்பாலும் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் ரயிலில் செல்வதையே விரும்புகிறார்கள். முக்கியமாக குடும்பமாக செல்பவர்களுக்கும் முதியோர்களுக்கும் ரயிலே வசதியாக இருக்கிறது. அதற்கு காரணம் ரயிலில் இரவு நேர பயணம் செய்தால் வசதியாக தூங்கலாம்.

மேலும் நினைத்த நேரத்திற்கு கழிப்பறையும் செல்ல முடியும். இதில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் சில நேரங்களில் தேவைப்பட்டால் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் தலையணை, பெட்ஷீட் போன்றவற்றை ரயில்வே வழங்குகிறது. ஆனால் இந்த பெட்ஷீட்கள் சுத்தமாகவும் இருப்பதில்லை. அதேப்போல் வசதியாகவும் இருப்பதில்லை என பயணிகள் பல வருடங்களாக புகார் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

இந்நிலையில் இதை சரி செய்யும் விதமாகவும் ரயில் பயணிகளின் பயணங்களை இன்னும் சௌகர்யமாக மாற்றவும் உயர் தரமான மிருதுவான மற்றும் நீண்ட காலம் உழைக்க கூடிய வகையிலான லினென் துணியில் அமைந்த போர்வைகளை பயணிகளுக்கு இந்திய ரயில்வே வழங்க முடிவுசெய்துள்ளது. ஆகையால் இனிமேல் ரயில் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவகை லினென் போர்வை

இந்திய ரயில்வேயின் ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவு நீண்ட நாள் ஆராய்ந்து இதை வடிவமைத்துள்ளது. இதற்காக இந்திய தர நிர்ணய சான்று வழங்கும் அமைப்பிடம் கலந்தாலோசித்து, உலகில் உள்ள மற்ற பிரபலமான ரயில்களில் வழங்கப்படும் வசதிகள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே இதை கொண்டு வந்துள்ளார்கள். ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஹோட்டலில் தங்கும் போது கிடைக்கும் வசதிகளுக்கு ஈடாக ரயிலும் இருக்க வேண்டும் என்பதில் ரயிவே நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. ஆகையால் இனிமேல் ரயில் பயணிகள் புத்துணர்ச்சிமிக்க பயண அணுபவத்தை பெறலாம். இந்த லினென் போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் உங்களுக்கு தொந்தரவு இல்லாத தூக்கத்தை தரக்கூடியதாக இருக்கும்.

விளம்பரம்

இதையும் படிங்க : ISRO : விண்ணில் பாய்ந்தது புவி கண்காணிப்புக்கான EOS-8 செயற்கைக் கோள்… வெற்றிகரமாக நிலை நிறுத்தம்

இந்நிலையில் இந்த புதுவகை லினென் போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. முதலாவதாக ஆகஸ்ட் 17, புதன்கிழமை அன்று பிலாஸ்பூர் ராஜ்தானியில் வைத்து ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளது. சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள புகைபடங்களில் சிவப்பு நிற போர்வையும் மிருதுவான வெள்ளை நிற தலையணைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்தப் பதிவிற்கு பல நெட்டிசன்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

தற்போது இந்த வசதியை சோதனை ஓட்டமாகவே தொடங்கியுள்ளோம். பயணிகளிடம் இருந்து கிடைக்கும் கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை பரிசீலித்து இதில் மாறுதல் ஏதாவது தேவைப்பட்டால் அதற்கேற்ற மாற்றங்களை செய்வோம் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் இந்த புது முயற்சி பயணிகளின் வசதியை மேம்படுத்துமா என்பது போக போகவே தெரியும்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways
,
Train

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்