இன்னும் 2 விக்கெட்டுகள்தான்… டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சாதனை படைக்க உள்ள ஆப்கான். பவுலர்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான பசல்ஹாக் பரூக்கி இதுவரை 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

பார்படாஸ்,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 46 ஆட்டங்கள் (லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று சேர்த்து) முடிவடைந்துள்ளன. லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் ஒரு முறை மோதி வருகின்றன. முடிவில் இரு அணிகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

நடப்பு தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தான் வீரரான பசல்ஹாக் பரூக்கி 15 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் இன்னும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார்.

அந்த பட்டியல்:

1. வனிந்து ஹசரங்கா – 16 விக்கெட்டுகள்

2. அஜந்தா மெண்டிஸ்/ வனிந்து ஹசரங்கா/ பசல்ஹாக் பரூக்கி – 15 விக்கெட்டுகள்

பரூக்கிக்கு குறைந்தபட்சாம் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளதால் இந்த மாபெரும் சாதனையை படைக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்