இன்று கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

செப்.7ல் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தாழ்வு பகுநதி செப்.8 காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசையில நகர்ந்து செப் 8 காலை 8 மணியளவில் கலிங்கப்பட்டினத்திற்கு(ஆந்திரம்) கிழக்கே 280 கி.மீ கோபால்பூற்கு(ஒடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா – மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று(செப்.9) மாலை/இரவில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி(ஒடிசா) தீகா(மேற்கு வங்காளம்) இடையே கடக்க உள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் செப்.14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்