இன்று மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி

மூன்றாவது முறை… கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இன்று மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

இன்று மணிப்பூர் செல்லும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார்.

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60,000 மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது, ஏராளமானோர் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மணிப்பூர் செல்லும் ராகுல் காந்தி, கலவரம் வெடித்த ஜிரிபாம் பகுதிக்கு சென்று பார்வையிடவுள்ளார். அதன்பின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்துப் பேசவுள்ள அவர், அம்மாநில அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
நீட் மோசடி வழக்குகள்… இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வியெழுப்பியிருந்த நிலையில் ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்ல உள்ளார். கலவரம் ஏற்பட்ட பின்னர், ராகுல் காந்தி மணிப்பூர் செல்வது இது 3-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அசாம் மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி அங்கு சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Manipur
,
Rahul Gandhi

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்