இன்று மாலை ஜார்க்கண்ட் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக வியாழனன்று மாலை ஜார்க்கண்ட் வருவதாக மாநில பாஜக தலைவர் தெரிவித்தார்.

அமித் ஷா இன்று மாலை ராஞ்சியை வந்தடைகிறார். கடந்த 1855ல் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தால் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய சகோதரர்களான சிடோ மற்றும் கானுவின் பிறப்பிடமான போக்னாதிக்கு வெள்ளிக்கிழமை செல்வார் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷேடியா தெரிவித்தார்.

பின்னர், பிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள ஜார்க்கண்ட் கோயிலுக்குச் சென்று, போலீஸ் லைன் மைதானத்திலிருந்து சந்தால் பர்கானா பிரிவுக்கான கட்சியின் 'பரிவர்தன் யாத்திரை'யை ஷா கொடியசைத்துத் துவங்கிவைத்து, அங்கு பொது பேரணியில் உரையாற்றுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் உள்ள விமானச் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் ட்ரோன்கள், பாராகிளைடிங் மற்றும் பலூன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜார்க்கண்டின் வெவ்வேறு பிரிவுகளில் எதிர்க்கட்சியான பாஜக ஆறு பரிவர்த்தன யாத்திரைகளைத் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த யாத்திரை செப்.20 முதல் அக.3 வரை 24 மாவட்டங்களில் உள்ள 81 தொகுதிகளிலும் 5,400 கி.மீ. யாத்திரை நடைபெறுகின்றது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!