தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகா் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (அக்.31) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து அரக்கோணம், சூலூா்பேட்டை, செங்கல்பட்டு வழித்தடத்தில் வாரநாள்களில் 5 முதல் 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை 10 முதல் 20 நிமிஷங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அனைத்து மின்சார ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.