இன்று முதுநிலை நீட் தேர்வு: நாடு முழுவதும் 2 லட்சம் மருத்துவர்கள் எழுதுகிறார்கள்

புதுடெல்லி,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுக்காக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால், இந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு ஆகஸ்டு 11-ம் தேதி இன்று காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறுகிறது.

தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகிறார்கள். காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்