இன்று வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது – போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ

போர்ச்சுகல் அணி இன்று முதல் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் ,வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது என கேப்டன் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுகல் – செக்குடியரசு (நள்ளிரவு 12.30 மணி) மோதுகின்றன .

இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி இன்று முதல் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் , வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது என அந்த அணியின் கேப்டன் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்று நமது வரலாற்றில் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. திறமையும் உறுதியும் உள்ள சாம்பியன்கள் நிறைந்த அணியுடன் இணைந்திருக்கும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது. அனைவரின் பலம் மற்றும் ஆதரவுடன், கனவுகளை நிஜமாக மாற்றுகிறோம். ஒன்றுபட்டு இன்னொரு வெற்றிக்காகப் போராடுவோம்.என தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து