இன்றைய ராசிபலன் – 02.11.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 16-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04.18 வரை சுவாதி பின்பு விசாகம்

திதி: இன்று இரவு 8.06 வரை பிரதமை பின்பு துவிதியை

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை: 04.45 – 5.45

ராகு காலம் காலை: 9.00 – 10.30

எமகண்டம் மாலை: 1.30 – 3.00

குளிகை காலை: 6.00 – 7.30

கௌரி நல்ல நேரம் காலை: 12.15 – 1.15

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 – 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ரேவதி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். வீட்டினை விரிவாக்க கூடுதல் அறை கட்டுவீர்கள்.இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகத்தை குறைப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவையா என உணர்ந்து செலவினை மேற்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

வாகனம் ஓட்டும்போது கவனமுடன் இருப்பது நல்லது. சுபகாரிய பேச்சுவார்த்தையை துவங்குவீர்கள். எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். தங்களுடைய அறிவை மற்ற இடங்களிலும் பரப்ப வேற்று மொழியினைக் கற்க துவங்குவீர்கள். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும். சுபகாரியத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. உடல் நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். நொறுக்கு தீணிகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். அப்படி அத்தியாவசியமானால், இரு சக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்து போகும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது கிளையை புது இடத்திற்கு கடையை துவங்குவீர்கள். பணப் பிரச்சினை இருக்காது. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். முகத் தோற்றம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத் தொகையுடன் மற்ற சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்கு இருக்கும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு நன்மதிப்பெண்கள் எடுப்பர். அவர்களால் ஆறுதலடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

தம்பதிகளிடையே ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பர். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில புதிய வகையான மாற்றம் செய்வீர்கள். சில சமயம் முன்கோபம் வந்து போகும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணப்பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மீனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்