“இப்படி ஆயிடுச்சு..” – கண்ணீர்விட்டு அழுத பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ.!

“வாய்ப்பு கிடைக்கல..” – கண்ணீர்விட்டு அழுத பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ.! – வைரலாகும் வீடியோ!

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தற்போதுவரை பா.ஜ.க., காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவிவருகிறது.

மாநிலத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இருமுறை ஆட்சியில் இருந்து வரும் நிலையில், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம், காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன. 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான 46 தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சூழலில் 40 தொகுதிகளை வென்றிருந்த பா.ஜ.க. 10 தொகுதிகளை வென்றிருந்த ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அந்தக் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.

விளம்பரம்

இந்த சூழலில் தான் தற்போது ஹரியானாவில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியும், பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதேசமயம் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டுவருகிறது. இதில் இந்திய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியர் இருவரும் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. அதன்படி பா.ஜ.க. 67 பெயர்களை கொண்ட தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், சில அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மூத்த தலைவர்களுக்கு இடம் இல்லாதது அங்கு பா.ஜ.க. உட்கட்சிக்குள் அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, அமைச்சராக இருந்துவரும் ரஞ்சித் சவுதாலா மற்றும் எம்.எல்.ஏ. லட்சுமண நாபா ஆகியோர் சீட் கிடைக்காத விரக்தியில் ராஜினாமா செதுள்ளனர். இதில் சவுதாலா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாகவும், லட்சுமண நாபா காங்கிரஸில் இணைவதற்கு விருப்பமும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

தற்போது மற்றொரு பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவும் மூத்த தலைவருமான சசி ரஞ்சன் பர்மருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. இவரிடம் செய்தியாளர் ஒரு இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர், “எனது பெயர் இடம் பெறும் என நான் நினைத்திருந்தேன்..” என்று தெரிவித்துவிட்டு அவர் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார்.

तोशाम से टिकट कटने पर फूट- फूट कर रोए शशि रंजन परमार, यहां से 2 महीने पहले कांग्रेस से बीजेपी में आई श्रुति चौधरी को बनाया उम्मीदवार।#ShashiRanjanParmar#Tosham#BJP#HaryanaElections2024pic.twitter.com/u11Gx8rsGK

— Tarun Rao Chandel (@Chandeltr) September 5, 2024

விளம்பரம்

அவரை பேட்டி எடுத்த செய்தியாளர் அவரை சமாதானம் செய்ய முற்பட்டபோது, “நான் என் பெயர் வரும் என மக்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தேன். தற்போது உதவி இன்றி நான் இருக்கிறேன். நான் தற்போது என்ன செய்வது? எனக்கு என்ன நடக்கிறது; எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ சசி ரஞ்சன் பர்மர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விளம்பரம்

ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்.5ம் தேதி வாக்குப் பதிவும், அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Congress
,
haryana
,
Viral Video

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி