இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் உள்ள லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் இன்று காலை 9.45 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அந்த மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசத்தில் உள்ள லஹால்-ஸ்பிட்டி மாவட்டமானது 4-ம் நில அதிர்வு மண்டலத்திற்குள் உள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் – 57 பேர் உயிரிழப்பு

“அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்