இமாச்சல பிரதேச மலையில் உயிரிழந்த அமெரிக்க சாகச வீரர்…

இமாச்சல பிரதேச மலையில் உயிரிழந்த அமெரிக்க சாகச வீரர்… 3 நாட்களுக்கு பின்னர் உடல் மீட்பு!

டிரிவர் பாக்ஸ்தாலர்

பேஸ் ஜம்பிங் சாகசம் செய்ய சென்ற அமெரிக்க சாகச வீரர் டிரிவர் பாக்ஸ்தாலரின் (Trevor Bokstaahlar) இறந்த உடலை 3 நாட்களுக்கு பிறகு இமாச்சலபிரதேச மாநிலத்தில் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயதான டிரிவர், இமாச்சலப்பிரதேசத்தின் லஹூல் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை சாகசம் செய்ய முயன்றிருக்கிறார். ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் டிரிவர் பயன்படுத்திய வாடகை பைக் கிடந்தது. வியாழக்கிழமைக்கு பிறகு டிரிவரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அவரின் தந்தை இமாச்சல பிரதேச காவல்துறையில் புகார் அளித்தார்.

விளம்பரம்

இதையடுத்து இந்தோ திபெத் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை கழுகுகள் வட்டமிட்ட இடத்தை டிரோன்கள் மூலம் மீட்புக்குழுவினர் சோதனை செய்தனர். அங்கு டிரவரின் பாராசூட் கிடந்தது. இதையடுத்து கரடு முரடான பாதையில் சென்ற மீட்புக்குழுவினர் டிரிவரின் உடலை கண்டெடுத்தனர். பாறைகள் சரிந்து விழுந்ததால் உடலை மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

உயிரிழந்த டிரிவரின் மரணம் நடந்தது எப்படி? பாறைகளில் இருந்து தவறி விழுந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

சுமார் 48 மணி நேர மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் டிரிவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், மலை ஏறும் சாகச பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The remains of 31-year-old American paraglider Mr. Bockstahler Trevor, missing near Kaza in Lahoul & Spiti, were brought down from 14800 feet by #ITBP mountaineers after one of the most challenging #RescueMission that lasted more than 48-hours. SDRF and police assisted.#Himveerspic.twitter.com/Ny4gR3hGGB

— ITBP (@ITBP_official) June 17, 2024

விளம்பரம்

#WATCH | The remains of 31-year-old American paraglider Bockstahler Trevor, missing near Kaza in Lahoul & Spiti, were brought down from 14,800 feet by ITBP mountaineers after one of the most challenging Rescue Mission that lasted more than 48 hours. SDRF and police assisted.
The… pic.twitter.com/i71YKU4TRZ

— ANI (@ANI) June 18, 2024

விளம்பரம்

டிரிவர் பயன்படுத்திய பைக் குறித்து, போலீசாருக்கு கிராமவாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கையில் இந்த தகவல் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளம்பரம்இதையும் படிங்க – மேற்கு வங்கத்தில் கோர ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்… வெளியான பதற வைக்கும் தகவல்

ஜூன் 15 ஆம் தேதி முதல் தேடுதல் வேட்டைக்கு பிறகு, குழுக்கள் இறுதியாக ஜூன் 16 ஆம் தேதி உடலை அடைந்தன. இருப்பினும், இருளும் அபாயகரமான நிலப்பரப்பும் மீட்பு நடவடிக்கையை மறுநாள் வரை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க – 300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்து இளம்பெண் பரிதாப பலி… ஷாக் வீடியோ!விளம்பரம்

ஜூன் 17 ஆம் தேதியான நேற்று, உடல் வெற்றிகரமாக கீழே கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட அமெரிக்கரான டிரிவரின் உடலை அமெரிக்கா கொண்டு செல்வதற்கு அந்நாட்டை சேர்ந்த குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
America

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?