இயற்கையின் கொடையான கொட்டாங்குச்சியில் உருவான கடவுள் சிலை…

இயற்கையின் கொடையான கொட்டாங்குச்சியில் கலைவண்ணம்… கடவுள் உருவங்களை நேர்த்தியாக செய்து அசத்தும் 60 வயது முதியவர்…

இயற்கை நமக்கு அளிக்கும் அளவற்ற நன்மைகளை அனுபவிக்கும் நாம், அந்த இயற்கையை பாதுகாப்பதில் இருந்து தவறி விடுகிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் சுற்றுச்சூழலை பேணிகாப்பதில் பொறுத்தவரை சுயநலவாதிகள் ஆக தான் நடந்து கொள்கிறோம். இயற்கையை சீர்லைப்பதற்கான செயல்பாடுகளில் தான் நாம் ஈடுபடுகிறோம். இந்த தலைமுறையிலேயே, இயற்கை முறையில் பல்வேறு மாற்றங்கள், விளைவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், வரும் தலைமுறையினர் என்ன செய்வார்களோ என்று நினைக்கும போது அச்சம் தான் தோன்றுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு கட்டிடங்கள் ஆகிறது. இதனால் மழை இல்லை, வெயில் அதிகரிப்பு , அளவுக்கு அதிகமான குளிர் போன்ற விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.

விளம்பரம்

ஆனால் ஒரு சில ஒரு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே தாமாக முன்வந்து இந்த சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் தன்னலமின்றி ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இயற்கை நமுக்கு அளிக்கும் தென்னை மரத்தில் இருந்து கடைசியாக துக்கி எறியப்படும் கொட்டாங்குச்சியில் கைவினை பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது.

ஷிவ் மந்திரின் சேர்ந்த விதான் பள்ளியை சேர்ந்த மகேஷ் மொடாக் என்பவர் கொட்டாங்குச்சிகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்களை செய்து வருகிறார். இந்த கொட்டாங்குச்சிகளை வடிவமைத்து அதிலிருந்து பல்வேறு கடவுள்களின் உருவங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்து வருகிறார். கொட்டாங்குச்சிகளை பயன்படுத்தி மகேஷ் பாபு செய்த இந்த கைவினை கடவுள் உருவங்கள் காண்போர் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இது போன்ற ஒரு அழகான மற்றும் தத்ரூபமான வேலையை நிச்சயமாக ஒரு கலைஞனால் மட்டுமே செய்ய முடியும்.

விளம்பரம்
கீரையை விட இரும்புச்சத்து அதிகம் உள்ள 7 சைவ உணவுகள்.!
மேலும் செய்திகள்…

கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்த சமயத்தில் தான் இந்த யோசனையைப் மகேஷ் மொடாக் கிடைத்தது. தனக்கு அருகில் இருக்கும் பிளேடு மற்றும் காகிதத்தை பயன்படுத்தி கைவினை பொருட்கள் செய்ய தொடங்கினார். இப்போது இது இந்த 60 வயது கலைஞருக்கு கிட்டத்தட்ட ஒரு போதையாகவே மாறிவிட்டது.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தின் அடியில் அமர்ந்து கொட்டாங்குச்சிகளை வைத்து இந்த வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார். கொட்டாங்குச்சிகளை பயன்படுத்தி ஒரு கடவுளின் உருவத்தை செதுக்குவதற்கு கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகும் என்கிறார் முதியவர் மகேஷ். முதலில் கொட்டாங்குச்சிகளை சுத்தம் செய்து, படங்களை வரைந்து, பிளேடு பயன்படுத்தி கொட்டாங்குச்சிகளை அதற்கேற்றவாறு வெட்டி அதனை கடவுள் உருவமாக வடிவமைக்கிறார். அதன் பிறகு பேப்பர் கொண்டு அதனை தேய்த்து, பாலிஷ் செய்து, இறுதியாக கடவுளின் உருவத்தை நிறைவு செய்கிறார்.

விளம்பரம்

சாலைகளில், வீதிகளில் தன் கண்ணுக்கு தென்படும் கொட்டாங்குச்சிகளை கொண்டு வந்த ஓவியம் வரைவதாக கூறும் மகேஷ், தனது வீட்டிலும் தென்னை மரம் உள்ளதாக தெரிவிக்கிறார். இந்த தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றைப் பறித்து கடவுள் உருவங்களை செய்வதற்கு பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்காலத்தில் பெரிய அளவில் செய்வதற்கான திட்டங்களை கொண்டு இருப்பதாகவும் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். ஒரு குடிசைத் தொழிலாக இந்த வேலையை மாற்றுவதில் தனக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுவரை செதுக்கிய கடவுளின் உருவங்கள் எதையும் விற்பனை செய்யவில்லை என்றும், எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இதனை கற்று கொள்ள ஆர்வமாக உள்ளவர்களுக்கும் கற்று தயாராக இருப்பதாகவும் 60 வயது கொண்ட முதியவர் மகேஷ் மொடாக் பெருமை பொங்க தெரிவிக்கிறார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kolkata

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?