இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2024 ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்தவகையில் 2024ஆம் ஆண்டுக்கான பரிசுகள் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க: பதட்டமும் பதற்றமும், ஆறும் ஆர்-ம்! பிழையற்ற தமிழ் அறிவோம்! – 4

முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, செயற்கை நரம்பியல் நெட்வொர்க் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடித்ததற்காக ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியது என்ன?

வேதியலுக்கான நோபல் பரிசு புதன் கிழமையும்(அக்.9), இலக்கியத்துக்கானது வியாழக்கிழமையும்(அக்.10) அறிவிக்கப்பட உள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை (அக்.11), பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ஆம் தேதியன்று ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்