இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.

இன்று காலை முதல் பல்வேறு இதமான காலநிலையும் நிலவி வருகின்றது. இதையடுத்து, பெரம்பூர், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது.

இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,793 கோடி!

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

நியூசி. ஒருநாள், டி20 தொடர்: இலங்கைக்கு புதிய கேப்டன்!