இறுதிப்போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

இறுதிப்போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.படம் | AP

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் 0 ரன்னில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மேலுமொரு அதிர்ச்சியாக அமைந்தது.

கேசவ் மகாராஜ் ஒரே ஓவரில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் இருவரின் விக்கெட்டினையும் வீழ்த்தி அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமாரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

பவர் பிளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்தது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்