இறுதி செய்யப்பட்ட மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட நியூசி. கிரிக்கெட் வாரியம்!

2024-25 ஆம் ஆண்டுக்கான வீரர்களுக்கான இறுதி செய்யப்பட்ட மத்திய ஒப்பந்த பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் விலகிய நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர்களான நாதன் ஸ்மித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் முதல் முறையாக மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு!

நாதன் ஸ்மித் & ஜோஷ் கிளார்க்சன்

20 பேர் கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் முதல் முறையாக ஆல்ரவுண்டர்களான நாதன் ஸ்மித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் இருவரும் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இவர்கள் இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.

Contract News | Promising allrounders Nathan Smith (Wellington Firebirds) and Josh Clarkson (Central Stags) have been awarded BLACKCAPS contracts for the first time #CricketNationhttps://t.co/8nLvZw4aKF

— BLACKCAPS (@BLACKCAPS) September 2, 2024

கடந்த ஆண்டு இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான கிளார்க்சன், நியூசிலாந்து அணிக்காக இதுவரை 3 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். நாதன் ஸ்மித் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுவதென்ன?

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாதன் ஸ்மித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் இருவரும் அணியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நம்புவதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நாதன் ஸ்மித்தை நாங்கள் தொடர்ந்து கவனித்து வந்தோம். சிவப்பு பந்து போட்டிகளில் ஸ்மித் சிறப்பாக செயல்படக் கூடியவர். சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அதனை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை அவருக்கு இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்!

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஜோஷ் கிளார்க்சன் கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர். சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்பினோம்.

பாக். டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேசம்!

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியல் விவரம்

டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ ரூர்க்கி, அஜாஸ் பட்டேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், ஈஷ் சோதி, டிம் சௌதி, வில் யங்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!