இறையருளால் மோடியைப் போன்ற நல்ல தலைவர்கள் உள்ளனர் -காஞ்சி சங்கராச்சாரியார்

பிரதமரின் தொகுதியில் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கரா கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசியில் இன்று(அக். 20) ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

காஞ்சி மடத்தின் 14-ஆவது மருத்துவமனையாக வாராணாசியில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு உத்தரப் பிரதேசதின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயனடையும் விதத்தில், சுமார் 225 படுக்கைகளுடன் பிரமாண்டமாக இந்த மருத்துவமனை கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆசிர்வதித்தார்.

அப்போது பேசிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “இறைவன் அருளால் மோடியைப் போல் நல்ல தலைவர்கள் நம்மிடையே உள்ளனர். இறைவன் பல்வேறு மகத்தான செயல்களை பிரதமர் மோடியின் மூலம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

நம் தேசம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டுகிறது. நாட்டுக்கு வலிமையான தலைமை இருப்பதே இதற்கானதொரு முக்கியக் காரணம்” என்று பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டி புகழ்ந்துள்ளார்.

ஆங்கிலத்தில் ’என்டிஏ’ என்றழைக்கப்படும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான புதியதொரு அர்த்தத்தையும் அவர் விளக்கியுள்ளார். அதன்படி என்டிஏ என்பது ‘ரேந்திர தாமோதர்தாஸின் னுஷாஷன்’ – அதாவது பாதுகாப்பு, வசதி மற்றும் மக்களின் நலன் சார்ந்ததொரு நல்ல நிர்வாகம் என்பதாகும்.

அவர் மேலும் பேசியதாவது, “சாமானிய மனிதன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொள்பவர் பிரதமர் மோடி. இதன் காரணமாக, அவற்றை களைய வேண்டுமென்கிற நோக்கத்தில் அவர் உழைக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்களுக்காக கடமையுணர்வுடன் செயலாற்றுகிறது. அதற்கான சிறந்த உதாரணமாக, கரோனா பெருந்தொற்று காலத்தில் ‘பிரதமர் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ளார். அதன்படி, எந்தவொரு நபரும் பசியால் பரிதவிக்கக்கூடாதென ஒவ்வொருவருக்கும் அரசு உணவளித்துள்ளதாக குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

“உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்களுக்கு ஒரு உதாரணமாக என்டிஏ அரசு திகழ்கிறது. இதைப் பார்த்து, பிற நாடுகள் கற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவின் உயர்ந்து வரும் மதிப்பும், ஒளிமயமான எதிர்காலமும், உலகளாவிய அமைதிக்கு இந்தியா வழிவகுக்கும். இந்தியாவின் வளமை உலகளாவிய வளமைக்கு பங்களிக்கும்.

நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு அடைவதில் கவனம் செலுத்தும் அரசு, அதுமட்டுமல்லாது, (சோம்நாத், கேதர்நாத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளைச் சுட்டிக்காட்டி) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கலாசார புத்தாக்கத்தின் மீதும் கவனம் செலுத்துவதாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்