இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா ரோஹித் சர்மா?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா ரோஹித் சர்மா?இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரோஹித் சர்மாபடம் | (எக்ஸ்)

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்குவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக குறைந்தளவிலான 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால், இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் மூத்த வீரர்களை விளையாட வைப்பதில் கம்பீர் ஆர்வமாக உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்புவில் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் திரும்ப உள்ளனர்.

ஒருவேளை ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவில்லை என்றால், கே.எல். ராகுல்தான் அணியை வழிநடத்துவார். ஏனெனில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு