இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு எரிபொருள் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் கூட்டம் மீது உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் ரயில் மோதியது.

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற 4 டேங்கர்கள் தடம்புரண்டன. மேலும் விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்ததுடன் மேலும் சில படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

இதனால் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!