இலங்கையில் வெள்ளம்… 1.34 லட்சம் மக்கள் பாதிப்பு!

இலங்கையில் தலைநகரான கொழும்பு மற்றும் பிற நகரங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 1.34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாரயிறுதி நாள்களில் பெய்த தொடர் கனமழையால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டு, வீடுகள், வயல்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். கிட்டத்தட்ட 1,34,000 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு

வீடுகள் நீரில் மூழ்கியதால் 7,000 மக்கள் இதுவரை வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அவர்களுக்கு உணவுகள் வழங்கும் பணிகளிலும் கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இதையும் படிக்க | இலங்கை: முக்கிய வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவு

கடந்த மே மாதம் முதல் மிக அதிகமாகப் பெய்து வரும் பருவமழையால் மோசமான வானிலையுடன் இலங்கை போராடி வருகிறது. கடந்த ஜூன் 16 அன்று வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 16 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது