இலங்கை அதிபருடன் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

கொழும்பில் இலங்கை அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயகவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது இருத்தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, புதிய அதிபருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துகொண்டார். ​​

மேலும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவினை அளிக்கும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். முன்னதாக இலங்கை அதிபர் திஸ்ஸநாயகவை சந்திப்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை இலங்கை சென்றடைந்தார்.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

இலங்கையின் ஒன்பதாவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸநாயக (56) அந்நாட்டின் 9-ஆவது அதிபராக செப். 23ஆம் தேதி பதவியேற்றார்.

இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அநுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!