இலங்கை அதிபர் அநுரகுமாரவுக்கு காங்கிரஸ் வாழ்த்து!

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸாநாயகவுக்கு காங்கிரஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அநுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா்.

தவறு நடந்துவிட்டது: திருப்பதி சமையல் கூடத்தைப் புனிதப்படுத்தும் பூஜைகள்!

இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திசாநாயக(56) கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் அந்நாட்டின் 9-ஆவது அதிபராக இன்று(செப். 23) பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயகவுக்கு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,

இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பலதரப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளின் வளமான பராம்பரியத்தைக் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜிநாமா

ராகுல் பகிர்ந்த வாழ்த்துச் செய்தியில்,

ஜனநாயக சமதர்ம குடியரசு நாடான இலங்கையின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்படடிருக்கும் அநுரகுமார திஸ்ஸாநாயக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!