இலங்கை ஆறுதல் வெற்றி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது.

துபாய்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (68.52 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், நியூசிலாந்து (50.00 சதவீதம்) 3ம் இடத்திலும், வங்காளதேசம் (45.83 சதவீதம்) 40 இடத்திலும் தொடர்கின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றஇலங்கை 2 இடங்கள் முன்னேறி 42.86 சதவீத புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது. தோல்வி கண்ட இங்கிலாந்து (42.19 சதவீதம்) 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6-லிருந்து 7-வது இடத்திற்கும் சரிந்துள்ளன.

பாகிஸ்தான் (19.05 சதவீதம்) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) கடைசி 2 இடங்களில் தொடர்கின்றன.

Records broken as Sri Lanka take third Test and enter top 5 of the #WTC25 Standings.More https://t.co/IGbcDmQneF

— ICC (@ICC) September 9, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்