இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!

இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை!இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிகா நிரோஷனாபடம் | எக்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தமிகா நிரோஷனா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் 19 வயதுக்குள்பட்ட இலங்கை அணிக்கு தமிகா நிரோஷனா (41) கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.

இலங்கையின் அம்பலங்கோடாவில் உள்ள வீட்டில் தமிகா நிரோஷனா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தமிகா நிரோஷனாவை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

சிறிய ரக கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பர்வேஸ் மகரூப், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால் உள்ளிட்ட பலரும் ஆல்ரவுண்டரான தமிகா நிரோஷனாவின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளனர்.

தனிப்பட்ட சில காரணங்களால் 20 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விலகிய தமிகா நிரோஷனா மொத்தமாக 12 முதல்தர மற்றும் 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறந்த ஆல்ரவுண்டரான இவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 300-க்கும் மேற்பட்ட ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 2000 ஆம் ஆண்டில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் அறிமுகமான தமிகா நிரோஷனா 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்