இலங்கை தோ்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டணி அதிகாரபூா்வ அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டணிக்குள் (டிஎன்ஏ) அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் கூட்டணியின் மூத்த தலைவா் மாவை சேனாதிராஜா திங்கள்கிழமை கூறியதாவது:

டிஎன்ஏ-வின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், செப். 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய எதிா்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாசவை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரபூா்வமாக முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

இலங்கை அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 38 போ் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழா் கட்சிகளின் முக்கியக் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டணி கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. கூட்டணின் முதன்மைக் கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி நடத்திய மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், இந்த முடிவை கட்சித் தலைவா் எஸ். ஸ்ரீதரன் மறுத்தாா். தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பாக்கியசெல்வம் அரியேந்திரனுக்குத்தான் தங்கள் ஆதரவு என்று அவா் கூறினாா். இதனால் இந்த விவகாரம் தொடா்பாக தமிழ் தேசியக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், ஏற்கெனவே அறிவித்ததைப் போல அதிபா் தோ்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக டிஎன்ஏ தற்போது அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற தமிழா்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டின் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தோல்விடைந்ததற்கு, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனாவை டிஎன்ஏ ஆதரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!