இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைப்பு?

கொழும்பு,

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர்அனுர குமார திசநாயகே வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார்.

இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது. இந்த நிலையில் அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். மேலும் இன்று இரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயகே உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.�

Related posts

பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனை நடத்திய சீனா

ஐக்கிய அரபு அமீரகம்: விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா ஏவுகணை பிரிவு தலைவர் பலி