இலங்கை- நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அணி பேட்டிங்!

இலங்கை- நியூசிலாந்து டெஸ்ட்டில் இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்!

டாஸ்

இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பிறகு, தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணியும் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

மெக்சிகோவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி!

வாழ்வா..சாவா..? நிலையில் நியூசிலாந்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நியூசிலாந்து அணியும் இருக்கிறது.

நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அடுத்து இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது.

ஒருவேளை இலங்கை அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தினால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். அதேவேளையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளை நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் முழுதாக வீழ்த்திவிட்டால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

மோடியை சந்திக்கிறார் டிரம்ப்!

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!