இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையேயான டி20, ஒருநாள் தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு!

மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

அக்டோபரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 13 டம்புல்லாவில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 20-26 ஆம் தேதி இடைவெளியில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

நம்பிக்கை மிகுந்த இலங்கை அணி

இலங்கை அணி கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி, இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருவது போன்ற விஷயங்கள் இலங்கை அணியின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதே சமயம், டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அண்மைக் காலமாக ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் அண்மையில் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதலாக உள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்கா!

இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Mark your calendars, cricket fans! The West Indies white-ball tour of Sri Lanka match fixture is here! #SLvWIpic.twitter.com/wpg7sX7GcU

— Sri Lanka Cricket (@OfficialSLC) September 27, 2024

டி20 தொடர் விவரம்

முதல் டி20 – டம்புல்லா, அக்டோபர் 13

2-வது டி20 – டம்புல்லா, அக்டோபர் 15

3-வது டி20 – டம்புல்லா, அக்டோபர் 17

ஒருநாள் தொடர் விவரம்

முதல் ஒருநாள் – கண்டி – அக்டோபர் 20

2-வது ஒருநாள் – கண்டி – அக்டோபர் 23

3-வது ஒருநாள் – கண்டி – அக்டோபர் 26

Related posts

Gwalior Man Paraded For Molesting Minor Girl; Booked Under POCSO Act

Haryana Police Arrest 18 Farmers For Stubble Burning In Kaithal; Register Cases Against 22

Bajaj Finance Shares Surge Over 6% After Posting 13% Rise In Q2FY25 Net Profit