இலங்கை வீரர் மீது கடுமையான நடவடிக்கை: 20 ஆண்டுகள் பயிற்சி நடத்த தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான துலிப் சமரவீராவுக்கு ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராகப் பணியாற்ற 20 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தடை

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரான துலிப் சமரவீரா நடத்தைவிதிகளை மீறி அணியில் இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டக் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

சென்னை: சூட்கேஸில் இருந்து பெண்ணின் உடல் மீட்பு!

கிரிக்கெட் வீரர்

துலிப் சமரவீரா இலங்கை அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் 2008 ஆம் ஆண்டு விக்டோரியா பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின் படி 52 வயதான துலிப் சமரவீரா அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எந்த கிரிக்கெட் அமைப்பிலும் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பை கலந்த ஜெகன் மோகன் அரசு! சந்திரபாபு நாயுடு

நிர்வாக செயல் இயக்குநர் பேச்சு

இதுபற்றி விக்டோரியா கிரிக்கெட் அணியில் நிர்வாக செயல் இயக்குநர் நிக் கம்மின்ஸ் கூறுகையில், “பயிற்சியாளருக்கு தடை விதிக்கப்பட்டதை ஆதரிக்கிறேன். மேலும், அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கும் வாழ்த்துகள். அந்தப் பயிற்சியாளர் வலுக்கட்டாயமாக அணியில் உள்ள பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய பெண் தைரியாமாக செயல்பட்டுள்ளார்” என்றார்.

கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டர் கைது..!

இதுவரை இந்த வழக்கில் பதிலளிக்காத சமரவீரா கடந்தாண்டு நவம்பர் மாதம் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் இரு வாரங்களில் பதவியில் இருந்து விலகினார்.

அவர் மகளிர் பிக் பாஷ் கிரிக்கெட்டில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தீர்ப்புக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!