இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: பெண்களுக்கு அழைப்பு

இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: பெண்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழகத்தில் பெண்களின்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னையில் இயக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தில் பயன்பெறபெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அதேபோல விண்ணப்பிக்கும் பெண்கள் 25 வயது முதல் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் தேவை. குறிப்பாக சென்னையில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் 250 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1லட்சம் தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படும். சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு வரும் நவ.23-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என சமூக நல ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை – கோவா அணிகள் நாளை மோதல்

சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்கிறேனா? – நடிகை அஞ்சினி

வயநாடு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி