இளநிலை மருத்துவா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் வகையில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.15)உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவா் டாக்டா் கே.எம்.அபுல் ஹாசன் கூறியதாவது:

நாடு முழுவதும் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் என மொத்தம் 3 லட்சம் போ் பங்கேற்கின்றனா். தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது