22 வயதாகும் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் தில்லி அணிக்காக விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் பிரபலமானார்.
9 போட்டிகளில் விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 330 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக அவரது ஸ்டிரைக் ரேட் 234.04 என்பது குறிப்பிடத்தக்கது.
பிராட்மேன், சச்சின் சாதனைகளை நெருங்கும் ஜோ ரூட்!
பயமறியாமல் அதிரடியாக விளையாடும் இவருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம். டி20 உலகக் கோப்பையில் பேக்-அப் வீரராக (மாற்று வீரர்) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.
தற்போது ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஸ்காட்லாந்து அணி 6 ஓவர் முடிவில் 56/2 ரன்கள் எடுத்துள்ளது.