‘இவரிடம் எல்லாம் சரியா இருக்கு’- இந்திய இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் சிறப்பாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

பெங்களூரு,

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நல்ல ஆல் ரவுண்டராக விளங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, 303 ரன்களும், 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர்.

இதன் காரணமாக அவரை சிறந்த ஆல் ரவுண்டராக மாற்ற வேண்டும் என்றும் அதற்கான பயிற்சியை விரைவில் பிசிசிஐ துவங்க வேண்டும் என்று விமர்சகர்கள் அப்போதே கூறியிருந்தனர். ஆனால் நிதிஷ் ரெட்டி இடமிருந்த ஆல்ரவுண்டர் திறமையை கண்ட தேர்வுக்குழு அவருக்கு உடனடியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஜிம்பாப்வே பயணிக்க முடியாமல் போனது.

இருப்பினும் துலீப் டிராபி தொடரில் இந்திய பி அணிக்காக விளையாட நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி முஷீர் கானின் அபார சதத்தால் 321 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது. பேட்டிங்கில் நிதிஷ் குமார் ரெட்டி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

பின்னர் இந்தியா ஏ அணி பேட்டிங் செய்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி பவுலிங் செய்ய தொடங்கினார். 2வது நாள் முடிவில் மொத்தமாக 7 ஓவர்களை வீசிய நிதிஷ் குமார், 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் 2 ஓவர்களை மெய்டனாக வீசி அசத்தினார். அவரது பவுலிங்கில் லைன் மற்றும் லெந்தில் சிறப்பாக இருந்ததோடு, அவரால் இன் ஸ்விங் செய்ய முடிந்ததை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங்கை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த நிதிஷ் குமார் ரெட்டியிடம் எல்லாம் சரியாக இருக்கு" என்று பதிவிட்டுள்ளார்.

This "NKR" looks proper pic.twitter.com/d67vfXvSxu

— Ashwin (@ashwinravi99) September 6, 2024

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்