இஷான் கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த யுவராஜ் சிங்!

இஷான் கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த யுவராஜ் சிங்!இந்திய அணி வீரர் இஷான் கிஷனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இஷான் கிஷன்படம் | ஐபிஎல்

இந்திய அணியின் இஷான் கிஷனுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் இன்று அவரது 26-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பான நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்களை இந்திய அணியில் விரைவில் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு