இஸ்ரேலின் வெறியாட்டம்! பேஜர்கள் வெடித்த விவகாரத்தில் லெபனான் குற்றச்சாட்டு

பேஜர்களை வெடிக்க வைத்தது இஸ்ரேல்தான் என்று லெபனான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு சரியான தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஜர் தாக்குதல்?

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென நேற்று வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்; 2,800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனா்.

அண்டை நாடான இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான மோதல், காஸா போா் விவகாரத்தால் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது இஸ்ரேலின் அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

லெபனானில் பேஜா்கள் வெடித்து 8 போ் உயிரிழப்பு; 2,750 காயம்

இதை லெபனான் அதிகாரிகள் உறுதியாகக் கூறினாலும், இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

லெபனான் அமைச்சர் குற்றச்சாட்டு

இந்த தாக்குதலானது இஸ்ரேலின் வெறியாட்டம் என்று லெபனான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு சரியான தண்டனை இஸ்ரேலுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பேஜர் வெடிப்பில் காயம் அடைந்தவர்.

பேஜர் வெடிப்பில் காயம் அடைந்தவர்.ஹிஸ்புல்லா தலைவர் தப்பினார்

இந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தால், ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ்வுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா விளக்கம்

பேஜர்கள் வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க உள்துறை செய்தித் தொடர்பாளர் மேத்தீவ் மில்லர் கூறுகையில், இந்த சம்பவத்தில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்றும், இதுகுறித்து அமெரிக்காவுக்கு முன்பே எதுவும் தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், லெபனானில் நடைபெற்ற பேஜர்கள் வெடிப்பு சம்பவம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்