இஸ்ரேலுக்கான பதிலடி நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்கும்

டெஹ்ரான்: தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டதாக இருக்கும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா்.

இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானியுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது இந்தத் தகவலை அவரிடம் கூறியதாக அராக்சி தெரிவித்தாா்.

ஈரானின் புதிய அதிபராக மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் கடந்த மாதம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவா் இஸ்மாயில் ஹனீயே ஜூலை 31-ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்காவிட்டாலும், அந்த நாடுதான் ஹனீயேவைக் கொன்ாக உறுதியாக நம்பப்படுகிறது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!