இஸ்ரேலுக்கு உறுதுணையாக கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு உறுதுணையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் வெடித்ததில் இருந்து இதுவரை 41,595 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 96,200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அங்கு கூடுதல் படைகளை அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

Related posts

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது – உங்களின் மைன்ட் வாய்ஸ் ?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு வசதியாக சறுக்குப்பாதை

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது