ஈரோட்டில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையை நாகர்கோவில் தம்பதிக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில் புரோக்கர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவில் பிறந்ததாகக் கூறப்படும் குழந்தையை நான்கரை லட்சம் ரூபாய்க்கு காதலன் விற்பனை செய்ததாக நித்யா என்ற பெண்ணிடமிருந்து குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் வந்ததையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.