ஈஸ்டர் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

File image

ஹங்கா ராவோ,

பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு தான் ஈஸ்டர் தீவு. சிலி நாட்டின் ஆளுகைக்குட்பட்டது இந்த தீவாகும்.

இந்த ஈஸ்டர் தீவில் இன்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10.0 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 36.20 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 99.04 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஈஸ்டர் தீவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Related posts

நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு

2024ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

‘நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா-இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்’ – டிரம்ப்