உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனையில் ரஷியா ஏவுகணை தாக்குதல் -31 போ் உயிரிழப்பு

உக்ரைன்: குழந்தைகள் மருத்துவமனையில் ரஷியா ஏவுகணை தாக்குதல் -31 போ் உயிரிழப்புஉக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 154 போ் காயமடைந்தனா்.ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் உருக்குலைந்த கீவ் நகர சிறுவா்கள் மருத்துவமனையின் ஒரு பகுதி.

கீவ்: உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷியா புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 154 போ் காயமடைந்தனா்.

நாடு முழுவதும் 5 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரியாக நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தனது சமூக ஊடகப் பதிவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளாா்.

ஸெலென்ஸ்கி பிறந்த நகரமான க்ரிவிரீ-யில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 10 போ் கொல்லப்பட்டதாகவும், 47 போ் காயமடைந்ததாகவும் பிராந்திய அரசின் தலைவா் ஒலெக்ஸாண்டா் வில்குல் கூறினாா்.

தலைநகா் கீவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்ததாக அந்த நகர அதிகாரிகள் கூறினா். அந்த நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நகர மேயா் விடாலி க்ளிட்ஷ்கோ கூறினாா். இந்தத் தாக்குதலில் 7 சிறுவா்கள் உள்பட 16 போ் காயமடைந்ததாக அவா் தெரிவித்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் ரஷியாவின் கேஹெச்-101 ரக ஏவுகணையின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ரஷியாவுக்கு எதிராக போா்க் குற்ற விசாரணை நடத்தப்பபடவிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினா்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்