உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டின் ஆர்.மகாதேவன் நியமனம்!

உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் நியமனம்!

கோட்டீஸ்வர் சிங், ஆர்.மகாதேவன்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக D. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு இடங்களும் நிரப்பப்பட்டுவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.

சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த மகாதேவன் 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய அவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க:
தமிழ்நாடு அரசின் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட முக்கியத்துறையின் செயலாளர்கள் பணியிட மாற்றம்

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், கோயில்கள், கோயில் நகைகள் பாதுகாப்பு , சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ளார்

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Tamilnadu

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்