உடற்பயிற்சி, படப்பிடிப்பு, சிகிச்சை…! சமந்தாவின் ஒருநாள் நிகழ்ச்சி நிரல்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

தற்போது, மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார். அதற்காக குதிரையேற்றப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகளை பயின்று உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.

வாழை: ஓடிடி ரிலீஸ் தேதி!

அடுத்தடுத்த படங்கள்

சமந்தா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளனர். அதன் முதல் படமாக, ‘மா இண்டி பங்காரம்’ உருவாகிறது. அதில் ஆக்சன் நாயகியாகவே நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் கௌதம் மேனன் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்டாடல் தொடர் சமந்தா நடித்துள்ள பாகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார்.

நந்தன் படத்தின் புதிய பாடல்!

ஒருநாள் நிகழ்ச்சி நிரல்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையின் தங்கம் எனக் குறிப்பிட்டு உடற்பயிற்சி முதல் படப்பிடிப்பு வரையிலான காட்சிகளைப் பதிவிட்டுள்ளார்.

அதில் என்னுடைய வாழ்வில் ஒருநாள் எனக் கூறி சமந்தா பகிர்ந்திருப்பதாவது:

  • காலை 6 மணிக்கு சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் இருக்கிறார். பின் எண்ணெய்யால் வாய் கொப்பளித்தல், சீன முறையில் இரத்த ஓட்டத்தை சீராக்க குவா ஷா பயிற்சி.

  • பின்னர் 7 மணிக்கு உடற்பயிற்சி செய்கிறார். கடவுளை வணங்குதல்.

  • பிறகு காரில் செல்லும்போது கண்ணுக்கு சிகிச்சை. 9 மணிக்கு படப்பிடிப்புக்கு செல்லுதல்.

  • மாலை 6 மணிக்கு ரெட் லைட் சிகிச்சை செய்தல்.

  • மாலை 7 மணிக்கு விளையாட்டு.

  • இரவு 9.30 மணிக்கு தியானம். இரவு10 மணிக்கு தூங்க செல்லுதல்.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்