உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர் சிகிச்சை

யானை மிகவும் சோர்வாக இருந்ததால் பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

கோவை,

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை பிளிரும் சத்தம் கேட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, குட்டியுடன் படுத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் வன கால்நடை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். யானை மிகவும் சோர்வாக இருந்ததால் பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

யானை படுத்தே இருந்ததால், அதனை கிரேன் உதவியுடன் 2 பெல்டுகள் போட்டு தூக்கி நிறுத்தினர். பின்னர் அதற்கு தேவையான உணவுகளையும், தொடர் சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர். காட்டு யானையை நிற்க வைத்து இதுபோன்று உணவு மற்றும் சிகிச்சை அளித்ததால் விரைவாக குணமாகி வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா

தமிழகத்தில் வழங்கப்பட்ட முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை கோரிக்கை