உணர்ச்சிவசப்பட்ட நீடா அம்பானி – காரணம் இதுதான்!

Anant -Radhika Wedding : ”என் இதயத்தின் இரண்டு பகுதிகள்” – உணர்ச்சிவசப்பட்ட நீடா அம்பானி!

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்து நீடா அம்பானி உரையாற்றினார். அப்போது, ஒற்றுமை குறித்து வலியுறுத்தினார்.

நீடா அம்பானி பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம், இந்த புனிதமான விழாவில் எங்களுடன் இணைந்ததற்கு மிக்க நன்றி. இந்த நேரத்தில் என் இதயத்தின் இரண்டு பகுதிகளான அனந்த் மற்றும் ராதிகா ஆகியோர் இந்த நித்திய பந்தத்தில் ஒன்றுபடுவதை பார்க்கும்போது, மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் ஆழ்ந்த பக்தியில் மூழ்கி விட்டேன். இந்து பாரம்பரியத்தில் திருமணம் என்பது இந்த வாழ்நாளில் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் உறுதியான பந்தம். எனவே, ஒவ்வொரு நாளிலும் அவர்களது காதல் ஆழமாக வேண்டும்” என்று உரையாற்றினார்.

விளம்பரம்விளம்பரம்

முன்னதாக, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண நிகழ்ச்சிகள் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மிகவும் பிரமாண்டமான அண்டலியா இல்லத்தில் மாமேரு நிகழ்ச்சியுடன் கடந்த வாரத்தில் தொடங்கியது. நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கான விழாக்கள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க:
அம்பானி வீட்டு கல்யாணம் : கலக்கல் நடனமாடிய பிரியங்கா சோப்ராவின் வைரல் வீடியோ

இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். இதில், அனந்த் மற்றும் ராதிகாவின் உறுதியேற்பு வீடியோவுடன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Jio
,
mukesh ambani
,
Nita Ambani
,
Radhika
,
Reliance

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்