உதயநிதி துணை முதல்வராவது எப்போது? – அமைச்சர் பதில்!

உதயநிதி துணை முதல்வராக இன்னும் ஒரு வாரத்தில் அல்லது 10 நாள்களில் பதவியேற்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர்களே, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வந்தன.

மேலும் நேற்று மாலை இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

தான் துணை முதல்வர் ஆவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலினும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, 'இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி பதவியேற்பார்.

அவர் துணை முதல்வராவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில், ஏன் நாளையே அறிவிப்பு வெளியாகலாம்' என்று கூறினார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!