உத்தரகாண்ட்: ஆற்றுக்குள் பாய்ந்த சுற்றுலா வேன் – 10 பேர் பலி

டேராடூன்,

டெல்லியை சேர்ந்த 26 பேர் வேனில் உத்தரகாண்ட் சுற்றுலா சென்றுள்ளனர். உத்தரகாண்ட்டின் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான பகுதியில் இன்று வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் சறுக்கிக்கொண்டு அலக்நந்தா ஆற்றுக்குள் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்