உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும் சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் இன்று(அக். 14) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதயம், தமனிகளில் அடைப்புகள் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | பதவிக்காலம் முடிந்தும் ஆளுநராக ஆர்.என். ரவி தொடருவது ஏன்?

கடந்த 2012ல் உத்தவ் தாக்கரேவுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது அவரது இதயத்தில் மூன்று முக்கிய தமனிகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய மருத்துவர்கள் 8 ஸ்டென்ட்களை வைத்துள்ளனர். தொடர்ந்து 2016-ல் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டார்.

தற்போது மீண்டும் இதயத்தில் அடைப்பு ஏதேனும் இருக்கிறதா எனக் கண்டறிய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | கனமழை: மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

மும்பையில் கடந்த அக். 12 ஆம் தேதி நடைபெற்ற தசரா விழாவில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசிய நிலையில் அன்று முதலே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலத்துக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது